தமிழக மாணவர்கள் அதிகம் இந்த நீட் தேர்வில் கலந்து கொள்ளக்கூடாது என்று சூட்சமம் உள்ளது - வேல்முருகன்
நெல்சன் கென்னடி
UPDATED: Jun 28, 2024, 9:23:06 AM
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இரண்டு முறை சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியும் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
ஆனால் ஜனாதிபதி அந்த சட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை.
தொடர்ந்து தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எதிர்கொள்ள முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு உயிர்களை இழக்கிறார்கள்.
நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் என் டி ஏ அலுவலகத்தை பூட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
தமிழக மாணவர்கள் அதிகம் இந்த நீட் தேர்வில் கலந்து கொள்ளக்கூடாது என்று சூட்சமம் உள்ளது என்று நினைக்கிறேன்.
தமிழகத்தில் ஆன்லைன் பதிவு செய்ய முயற்சிக்கும்போது, முறையாக செயல்படவில்லை. என் மகள் மருமகன் முயற்சி செய்து கிடைக்கவில்லை.
ஹைதராபாத்துக்கு தேர்வு எழுத செல்லும் பொழுது தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். நள்ளிரவு ரத்து செய்தால் எப்படி மாணவர்களுக்கு தெரியும்.
பல லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வுகளை எழுத முகாம்களை நோக்கி செல்லும் போது சங்கடங்கள் ஏற்படுகிறது.
மொழி தெரியாத இடம் தெரியாத இடத்தில் எங்கு தங்குவார்கள்? எப்படி கண்டுபிடிப்பார்கள்.
அண்ணாநகர் பகுதியில் உள்ள தென்னிந்திய நீட் அலுவலகத்தில் வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டோம்.
வட மாநில மாணவர்களை இங்கு நிரப்புவதற்கான சூழ்ச்சி சதி நடந்து வருகிறது.