தமிழரசுக் கட்சியின் விசேட குழு வவுனியாவில் கூடியது
வவுனியா
UPDATED: Sep 10, 2024, 11:52:24 AM
தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு இன்றைய தினம் வவுனியாவில் கூடியது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு