விசிகவின் ஆட்சியில் பங்கு, அதிகாரம் என்பது இயக்கத்தின் நிலைப்பாடு அதில் தவறில்லை - துரை வைகோ.
JK
UPDATED: Nov 18, 2024, 4:58:58 AM
வ உ .சிதம்பரம் பிள்ளையின் 88ஆம் ஆண்டு நினைவு நாள்
சுதந்திரப் போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல் என அனைவராலும் போற்றப்படும் வ உ .சிதம்பரம் பிள்ளையின் 88ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரை.வைகோ :
திருமாவளவன் தொடர்ந்து கூட்டணியில் உள்ளேன் என்று கூறி வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ளோம் என நேற்று கூட அவர் செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார் எனவே, அது தவறான செய்தியாகும்.
துரை.வைகோ
அதிகாரம் வேண்டும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதற்காக கூட்டணியை விட்டு சென்றுவிட்டார், சென்று விடுவார் என கூற முடியாது.
அது கட்சி தொண்டர்களின் ஆர்வம், அது இயக்கத்திருக்கும் ஆர்வம், இருப்பதில் தவறில்லை மதிமுக பொறுத்தவரை அந்த எண்ணம் கிடையாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஆற்றில் பங்கு அதிகாரம் என்பது அது இயக்கத்தின் நிலைப்பாடு எனவே அவர் கூட்டணியை விட்டு வெளியே போய்விடுவார் என்று கூற முடியாது என தெரிவித்தார்.
என் நிகழ்வின்போது மாநில துணை பொதுச்செயலாளர் மருத்துவர் ரெக்யாஷேக் முகமது, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், சேரன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.