• முகப்பு
  • அரசியல்
  • புத்தளம் எலுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதையினை மீளத் திறந்து மக்கள் போக்குவரத்தினை இலகுபடுத்த உதவுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

புத்தளம் எலுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதையினை மீளத் திறந்து மக்கள் போக்குவரத்தினை இலகுபடுத்த உதவுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

(அஷ்ரப் ஏ சமத்)

UPDATED: Oct 8, 2024, 11:08:24 AM

புத்தளம் எலுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதையினை மீளத் திறந்து மக்கள் போக்குவரத்தினை இலகுபடுத்த உதவுமாறு முசலியினை பிறப்பிடமாகக் கொண்ட சிராஜூதீன் முஹம்மத் நிப்ராஸ் ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்கவிடம் வேண்டுகோளினை முன் வைத்துள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்த அவர் மன்னார் - புத்தளம் பாதை தொடர்பில் தயாரிக்கப்பட்ட கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளரிடத்தில் சமர்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

கடந்த தேர்தலில் சகலதையும் தோற்கடித்து நீங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையினை ஏற்றுக் கொண்ட மக்கள் பாரிய வெற்றியினை வழங்கினார்.இதற்கு எமது நன்றியினை தங்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றேன்.

ஏனெனில் வாக்களிக்காத மக்களையும் அரவனைத்து அவர்களது உள்ளத்தினையும் வெற்றி கொள்ளும் வேலைத்திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வரும் ஒரு புதிய கலாசாரத்தினை தோற்றுவிக்கும் உங்களது கருத்து தொடர்பில்.

இதே வேளை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அநுராதபுரம ஊடாக சுமார் நான்கரை மணித்தியாலயலங்கள் பயணிக்க நேரிடுவது தொடர்பில் புத்தளம் மன்னார் பாதை மீள திறப்பதன் மூலம் அதில் அறைவாசி நேரமே செலவாகும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி மீள பாதையினை திறப்பதற்கு தேவையன நடவடிக்கையினை எடுப்பீர்கள் என தான் நம்புவதாகவும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சிராஜூதீன் நிப்ராஸ் கூறினார்.

 

VIDEOS

Recommended