• முகப்பு
  • அரசியல்
  • எதிர்கட்சி தலைமை என்பது மாற்று அரசாங்கம் ஒன்றின் பிரதமருக்கு சமமானது,அதனை அடைவதும் எமது நோக்கமாகும்

எதிர்கட்சி தலைமை என்பது மாற்று அரசாங்கம் ஒன்றின் பிரதமருக்கு சமமானது,அதனை அடைவதும் எமது நோக்கமாகும்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 14, 2024, 4:04:54 PM

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் பாராளுமன்றத்திலும் ஏற்பட வேண்டுமல்லாது திறமை மிக்க புதிய உறுப்பினர்கள்,குறிப்பாக இளைஞர்கள் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கில் நாம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதய சூரியன் சின்னத்தின் நுவரெலிய மாவட்ட வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

தமிழர் விமுதலை கூட்டணியின் மீண்டும் சுதந்திர யுகத்திற்கு உதய சூரியன் சின்னத்தில் ஜக்கிய கூட்டணியாக போட்டியிடும் நுவரெலிய,கண்டி மாவட்ட மலையக அரசியல் அரங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பு வெள்ளவத்த கிரீன் பெலஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

இதன் போது கருத்துரைத்த மயில்வாகனம் திலகராஜ் -

மேல் குறிப்பிட்ட இரு மாவட்டங்கள் தவிர்ந்த கிழக்கில் மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களிலும்,அது போன்று வடக்கில் யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களிலும் உதய சூரியன் சின்னத்தில்; வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

நுவரெலிய மாவட்டம்,கண்டி மாவட்டங்களில் நஜா முஹம்மத் அவர்களை தலைவராக கொண்ட சமூக நீதி கட்சியுடன்,மலையக அரசியல் அரங்கம் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

 

 

 

VIDEOS

Recommended