பாபநாசம் அருகே திமுக கொடி கம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு திமுகவினர் சாலை மறியல்.
ஆர். தீனதயாளன்
UPDATED: Jul 30, 2024, 11:51:53 AM
பாபநாசம்
பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் கண்டியன் வாய்க்காலில் கல்வெட்டு அமைக்கும் பணிக்காக சாலையோரம் இருந்த திமுக கொடி கம்பத்தை அகற்றப்பட்டதால் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவர் யூசுப் அலி மற்றும் திமுகவினர் அங்கு திரண்டனர் பின்னர் தஞ்சை கும்பகோணம் சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கல்வெட்டு அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு மறியலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திமுக
அப்போது திமுக கொடி கம்பத்தை வேன்றுமென்றே அகற்றவில்லை எனவும் பணிக்கு இடையூறாக இருந்ததால் தவறுதலாக பணியாளர்கள் அகற்றி விட்டனர் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்,
கொடி கம்பத்தை சீர்செய்து மீண்டும் அதே இடத்தில் அமைத்து தருவதாக உறுதி அளித்தார் இதனை தொடர்ந்து திமுகவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் பின்னர் போக்குவரத்து சரியானது.
திமுக கொடி கம்பம் அகற்றப்பட்ட சம்பவத்தால் ராஜகிரி பகுதியில் தஞ்சை கும்பகோணம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.