• முகப்பு
  • அரசியல்
  • அண்ணாமலை புகைப்படத்தை செருப்பால் அடிக்க முயன்ற  காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு.

அண்ணாமலை புகைப்படத்தை செருப்பால் அடிக்க முயன்ற  காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு.

ராஜா

UPDATED: Jul 10, 2024, 6:39:40 PM

காங்கிரஸ்

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார் இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. 

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன இதன் ஒரு பகுதியாக தேனி நேரு சிலை பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்று காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலை

முன்னதாக அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிப்பதை தடுக்கும் விதமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்டோவில் மறைத்து வைத்துக் கொண்டு வந்த அண்ணாமலையின் உருவ பொம்மையை தேடி சென்று கைப்பற்றிய போலீசார் அதனை கைப்பற்றி ஓடி சென்று தண்ணீர் ஊற்றி உருவ பொம்மை எரிப்பதை தடுத்தனர். 

பின்னர் அருகில் உள்ள உணவகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மையையும் கைப்பற்றி போலீசார் அதனை அப்புறப்படுத்தினார்.

பின்னர் நேரு சிலை பகுதியில் கூடி இருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டன அப்போது அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்து, கீழே போட்டு செருப்பை வைத்து அடிக்க முற்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர் இதனால் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Latest Political News

சுமார் 1 மணி நேரமாக காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended