கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்; டாக்டர் அருணா அஜிஸ் கடும கண்டனம்
ஏசுராஜ்
UPDATED: Jun 28, 2024, 7:25:53 PM
தமிழரின் தலைமை விவசாய சங்க தலைவர் டாக்டர் அருணா அஜிஸ் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.அவர் செய்தியாளர்களுக்கு பேசியதாவது:
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை அரசு வேலை கொடுக்க வேண்டும்.
போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றால், அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது
ஒரு சிறிய ஊரில் 53 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம்” எனவும், கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த 'விஷச்சாராயத்தைக்' குடித்து 22 பலியானார்கள் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், மதுவிலக்குக் கொள்கை’ என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்து விடுவதாகவும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு முன்னுதாரணத் திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே அரசு செயல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.
“சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தார்.
மேலும் தற்போது அதிகம் செயல்படுத்தப்படாமல் உள்ள கிராம காவல் திட்டத்தின் கீழ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் ஆகியோரை காவல்துறை தொடர்பு கொண்டு, அந்தந்த கிராமத்தில் முறைகேடாகச் சாராயம் விற்பது குறித்தும், அதில் ஈடுபடுவோர் குறித்தும் தகவல் அளிக்க அவர்களை வலியுறுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் கிராம அளவில் காவல்துறை அதிகாரிகள் சாராயத்தை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’என்றார்.