தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றுகிறது - தவெக கொள்கைகள்
கோபிநாத் பிரசாந்த்
UPDATED: Oct 27, 2024, 12:51:10 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள்
"மத நம்பிக்கை உள்ளவர்கள், அற்றவர்களை சமமாக பார்ப்போம்" பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பதே தவெகவின் கொள்கை
"போதை அறவே இல்லாத தமிழ்நாட்டை படைத்தல்" - தவெக கொள்கை
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதே தவெகவின் கோட்பாடு
மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கை
மதம், சாதி, பாலினம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம்
தவெக - TVK
மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை
தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தவெக பின்பற்றும் - தவெக
`தமிழ்த்தாயின் தலைச்சன் பிள்ளை விஜய்' என கொள்கை பாடல்
இல்லாமை இல்லாமல் வெல்லும் வரை...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என் திருக்குறள் வரியை கூறும் விஜய்
பெரியார், அம்பேத்கர், காமராஜர் பெயர்களை கூறி அரசியலுக்கு வருவதாக சொல்லும் விஜய்
பெரியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் விஜய் கையைப்பிடித்து அழைத்து வருவதுபோல காட்சிகள்.
தவெக முதல் மாநில மாநாட்டில் கொடிப்பாடல் முழங்க கொடியை ஏற்றிவைத்தார் தவெக தலைவர் விஜய்.
விஜய்
மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து கட்சிக் கொடியை ரிமோட் மூலம் விஜய் ஏற்றினார்.
தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றி வைத்தவுடன் கட்சியின் கொடி பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்தினை தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சரியாக 4 மணியளவில் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தினார். மாநாட்டில் தொண்டர்கள் அளித்த கட்சித் துண்டை அதன் தலைவர் விஜய் அணிந்து கொண்டார்.
பறையாட்டம்
தொண்டர்களின் ஆரவாரத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விஜய் காணப்பட்டார். தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலுக்கு பின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. மேடையில் பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.