• முகப்பு
  • அரசியல்
  • வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய பேரவை உதயமாகும் ஊடக சந்திப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய பேரவை உதயமாகும் ஊடக சந்திப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்

வவுனியா

UPDATED: Jun 29, 2024, 1:19:51 PM

தமிழ் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்ற பொது கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பொதுச்சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார்.

இன்று வவுனியா வாடி வீட்டில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையில் இடம்பெற்ற ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்

 அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்சிகளும் மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து கலந்துரையாடி இன்று ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த உடன்பாட்டின் பிரகாரம் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படும். அந்த பொது கட்டமைப்பு தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்படும்.

அந்த தமிழ் தேசிய பேரவையின் கூட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெற உள்ளது.

அந்தக் கூட்டத்தில் உத்தியோபூர்வமாக புரிந்துணர்வு உடன்படிக்கை கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையே கைச்சாத்திடப்படும். அதன் பின்னர் தேவையான உபகுழுக்களை உருவாக்கி ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை தமிழ் மக்கள் பொதுச்சபை எடுத்துக்கொண்ட சர்வசன வாக்கெடுப்பு என்கின்ற நிலைப்பாடு தற்போது இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது,

ஒரு பொதுக் கட்டமைப்பு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக் கட்டமைப்பு உப கட்டமைப்புகளை உருவாக்கும். அந்த உப கட்டமைப்புகளில் ஒன்று யார் தமிழ் பொது வேட்பாளர் என்பதை தேர்வு செய்யும். மற்றைய உபகட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் எது என்பதை உறுதி செய்யும். ஆகவே உப கட்டமைப்புகள் தான் அதனை வெளிப்படுத்தும்.

இவைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது யார் என்பதை தீர்மானிப்பதாக இருந்தாலும் எந்த கட்சியில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளீர்களா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியவாறு?

இதில் தமிழ் தேசிய பேரவை என்ற பொதுக் கட்டமைப்பு இதற்கான முடிவுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் தமிழ் மக்கள் பொதுச் சபை என்ற சிவில் அமைப்பு பிரசாரத்தில் ஈடுபடுமா என கேட்ட போது?

நிச்சயமாக அது பிரசாரத்தில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அமைப்பு ஒரு அரசியல் மயமான அமைப்பாக இருக்குமா என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்ட போது?

அது அரசியல் செயற்பாடு தான் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும். அது ஒரு அரசியல் நடவடிக்கையாக தான் இருக்கும். தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியல் நடவடிக்கை தான் இந்த ஜனாதிபதி தேர்தல். பொது வேட்பாளர் நிறுத்துவது என்பது அதனை தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்டிருக்கக் கூடிய சகல பொது அமைப்புகளும் இணைந்து அதனை முன்னெடுத்திருக்கின்றோம். இது எல்லாமே அரசியல் பயன்படுத்தப்பட்டதாக தான் இருக்கும். ஆகவே அதனை நாங்கள் செய்கின்றோம்.


ஒரு மாகாண சபை தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் இந்த அமைப்பு 13வது திருத்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளுமா அல்லது அதனை நிராகரிப்பதற்கான முடிவுகளை எட்டுமா என கேட்கப்பட்டபோது?

அது தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று கருத்தோடு சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறியிருந்தார். 

7 கட்சிகள் தற்போது இணைந்து அந்த கூட்டை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் மக்கள் பொதுச்சபையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அதில் இணைந்திருக்கின்றார்கள். இந்த ஏழு கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை ஏற்கனவே ஏற்றுக் கொண்ட கட்சிகளாக தான் இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய சந்திப்பில் தமிழ் மக்கள் பொதுச்சபையைச் சேர்ந்த பிரதிநிதிகளோடு டெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம் பி, புளட் சார்வில் சித்தார்த்தன், தமிழ்த் மக்கள் கூட்டணி சார்பில் சி. வி. விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ. ஐங்கரநேசன் மற்றும் தமிழ் தேசிய கட்சி சார்பில் என். ஸ்ரீகாந்தா உட்பட கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended