• முகப்பு
  • அரசியல்
  • காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி எம் ஹசினா நியமனம்.

காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி எம் ஹசினா நியமனம்.

நெல்சன் கென்னடி

UPDATED: Apr 25, 2024, 12:10:32 PM

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் சாதியமூர்த்திபவனில்  தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி எம் ஹசினா நியமிக்கப்பட்டதை தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார் :

முதல் கட்ட தேர்தல் முடிந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது, தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாது என பாஜக விமர்சனத்தை தெளித்து கொண்டு வருகிறது 

இரண்டு நாட்களுக்கு முன்பாக மத ரீதியாக கலவரத்தை மக்களிடம் தினிப்பதற்கு முயற்ச்சி செய்வது மக்களிடம் தெரியவந்துள்ளது.

ஆர் எஸ் எஸ் சித்தாந்ததை மக்களிடம் மத ரீதியாக பிளவு படுத்தும் வகையில் பேசியுள்ளார் , யாராவது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் எங்கும் பிரச்சாரம் செய்ய கூடாது என தடை விதிக்கிறதோ அதை போல் நரேந்திர மோடிக்கும் தடை விதிக்க வேண்டும் 

மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளார் , ஹிந்து மக்கள் அவர் பின்னால் இருக்கின்றனர் ஆனால் அவரது சித்தாந்தம் தெரிந்து கொண்டு அவரை தோல்வி புரிய செய்வார்கள் 

மாங்கல்யத்தை பற்றி பேசிய மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் 

இந்திரா காந்தி 32 குண்டுகள் பெற்று நாட்டுக்கு தியாகம் செய்தார் , எங்கள் தலைவர் ராகுல் காந்தி ஒரு பொழுதும் இதை அரசியல் ஆக்கி வாக்கு சீக்ரிக்கவில்லை ஆனால் மோடி ஏழை மகன் என போய் பேசி பொய் வாக்கு வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்

ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் நாசி ஆட்சி நடந்தது போல் இங்கு மோடியின் பாசிச ஆட்சி நடைபெற்று வருகிறது , ஜனநாயகத்திற்கு விரோதமான ஆட்சி நடைபெற்று வருகிறது 

வயநாடில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அதனை பொருத்துகொல்லாமல் நக்சலக்களாகிய பாஜாகவினர் பொய்களை பரப்பி வருகின்றனர் 

சையத் ஹசினா செய்தியாளர் சந்திப்பு :

தமிழகத்திலும் மத்தியிலும் பாசிச பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது, பெண்கள் என்றாலோ ஒரு வெறுப்பு கொண்டு ஆட்சி செய்து வருகின்றனர் , பாரத நாட்டில் பெண்கள் அவரது உயிரினும் மேலாக மதிக்கும் தாலியினை இழிவு படுத்தி பேசியுள்ளார் 

இதுவரை யாரும் கேட்காத வகையில் பாரத பிரதமரிடம் தாலிக்கு நியாயம் கேட்டு இந்திய பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இன்று மாலை 5 மணி அளவில் மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

 

  • 5

VIDEOS

Recommended