சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியார் ஜலனி கொழும்பிலும்.றிசாத் பதியுதீன் மன்னாரிலும் வாக்களிப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா / மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
UPDATED: Sep 21, 2024, 7:08:53 AM
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச ஆகியோர் ராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் வாக்களிப்புகள் ஆரம்பமாகியது.
இந்த நிலையில் மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் காலை 11 மணியளவில் வாக்களிப்பை மேற்கொண்டார்.மேலும் தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு