• முகப்பு
  • அரசியல்
  • ரணில் அநுர டீல் தோல்வி, 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் - எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச

ரணில் அநுர டீல் தோல்வி, 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் - எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 18, 2024, 6:22:25 PM

அனைத்து புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியும் நானும் இருபது இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவோம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அந்த நம்பிக்கை தற்பொழுது நாடு பூராகவும் பரவியுள்ளது. இந்த வெற்றியை சமாதானமாகவும் பணிவாகவும் ஒற்றுமையுடனும் கொண்டாட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் ரணில் அநுர ஆகியோரின் டீல் தோல்வியை தழுவுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 71 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 18ஆம் திகதி பேருவளை நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வேலை்திட்டங்களுக்கு மேலதிகமாகவும் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். பல்வகையான மீன்பிடித் தொழிலை நவீன மயப்படுத்தி அதற்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை மேம்படுத்துவோம். பராட்டே சட்டமூலத்திற்கு எதிராக கடந்த நான்கு வருட காலமாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எழுப்பிய குரல்களுக்கு தீர்வாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் சொத்துக்கள் மற்றும் வளங்களை ஏலமிடுவதை நிறுத்தி வைக்க முடிந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மூலதனத்தை வழங்குவோம். அத்தோடு ஒரு மில்லியன் புதிய தொழில் முனைவர்களை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொழிற்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அகற்றுவோம். இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொழிற்துறைக்கான பிரதான மத்திய நிலையமாக எமது நாட்டை உருவாக்குவோம். ஹொங்கொங் பேங்க்கொக் போன்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் மத்திய நிலையம் போன்று எமது நாட்டையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் புதிய தொழில்நுட்பத்தோடு விவசாயிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு நிவாரண அடிப்படையில் உரத்தையும் வழங்குவோம். வறுமையை ஒழிக்கும் நோக்கில் 24 மாதங்களுக்கு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்டு மாதம் 20 000 ரூபா வீதம் வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.  

அத்தோடு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சுகாதாரத் துறையையும் கல்வித்துறையும் மேம்படுத்தும் நோக்கில் ஒரு பில்லியன் பெறுமதியான வேலைத்திட்டங்களை நாட்டுக்காக செய்திருப்பது ஐக்கிய மக்கள் சக்தியாகும். ஏனைய எதிர்க்கட்சிகள் வெறுமனே வாய் சொல்லாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி இந்த சேவைகளை செய்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended