• முகப்பு
  • அரசியல்
  • வாழும் உரிமைக்கு முதலிடம் சஜித்துடன் பிரபா கணேஷன் உடன்படிக்கை

வாழும் உரிமைக்கு முதலிடம் சஜித்துடன் பிரபா கணேஷன் உடன்படிக்கை

கொழும்பு - முகம்மது நசார்

UPDATED: Aug 13, 2024, 3:46:39 PM

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசனுக்கும் இடையில் இன்றைய தினம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

original/dofoto_20240813_210944192
கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச விற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர்.

அரசியலமைப்பில் காணப்படும் 13வது திருத்தச் சட்டத்தை, அவ்வாறே அமல்படுத்துதல், மலையக மக்களுக்கு 10 பச்சர்ஸ் காணியை பெற்றுக்கொடுத்தல், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கான வீட்டு உரிமை உறுதிப்படுத்தல், ஊழலற்ற அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான உறுதியை வழங்குதல் அத்துடன் நீண்டகாலமாக கொழும்பு மாவட்டத்திலும், அது போன்று கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்ளும் வாடகை வீடுகளில் வசிக்கும் மூவின மக்களுக்கும் அவர்களது விகிதாசரத்திற்கு ஏற்ப்ப தொடர் மாடிகளில் குறைந்த முற்பணம் அறவிடும் திட்டத்தில் வீடுகளை பெற்றுக்கொள்ளும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடனேயே தான் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்ததாக பிரபா கணேசன் இதன் போது கூறினார்.

குறிப்பாக சஜித் அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாரன திட்டங்களை அறிமுகம் செய்தவர் என்பதினால் அனுபவம் கொண்டவர் என்றும் பிரபா கணேஷன் குறிப்பிட்டார்.

இதே போல் வீடுகள் அற்ற நிலையில் இலங்கையிலும், வடக்கு கிழக்கிலும் வாழும் சகல சமூகத்தினருக்கும் அனைவருக்கும் நிழல் கொடுக்கும் வீடு என்ற திட்டத்தை முன்னெடுக்க தாம் இதன் போது பரிந்துரை செய்துள்ளதாகவும் பிரபா கணேஷன் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended