இலங்கையில் அனல் தெறிக்கும் அரசியல் கதையாடல்கள்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 6, 2024, 6:27:24 PM

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

19 மற்றும் 20 வது திருத்த சட்டங்களின் ஊடாக ஜனாதிபதியின் அதிகார காலம் ஐந்து ஆண்டுகள் என வரையறை செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இலங்கை தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் ஆட்சியின் ஆயுட்காலம் ஆறு வருடம் என திருத்த சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றில் நபர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 இது தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்று வரும் வேளையில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு ஜனாதிபதியின் அதிகார காலம் ஐந்து வருடம் என ஜனாதிபதி நம்புவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.


இந்த அறிக்கையினை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம். பாலித்த ரங்கே பண்டார ஜனாதிபதி ரனில் விக்கமசிங்கவினால் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவைக்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிற்பாடு இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சரியான அங்கீகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 இந்தக் கருத்தாடல் அரசியல் களத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சிகள் மற்றும் பல்வேறு சிபில் அமைப்புகள் தொடர்ந்து நீச்சையாக அறிக்கைகளை வெளியிட்டு வருவதுடன், ஊடகங்கள் ஊடாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



VIDEOS

Recommended