• முகப்பு
  • அரசியல்
  • விக்கிரவாண்டி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்.

விக்கிரவாண்டி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்.

JK

UPDATED: Jul 6, 2024, 1:45:41 PM

விக்கிரவாண்டி தேர்தல்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஓட்டுநர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் 

விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தேன். நான் ஏற்கனவே திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தேன்செய்திருந்தேன் இதே போலத்தான் விக்கிரவாண்டியிலும் நான் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தேன்.

Latest Trichy District News

ஆனால் அதை அங்கு நிராகரித்துள்ளனர்  அது தவறு என கண்டித்து நான் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது மாவட்ட ஆட்சியர், தாசில்தார்கள் நடவடிக்கை எடுத்து எழுத்துப் பூர்வமாக பெற்றுத் தருகிறேன் என தெரிவித்தனர். ஆனால் எதனையும் அவர்கள் செய்யவில்லை.

நான் நேரடியாக விக்கிரவாண்டி சென்றேன் அங்கேயும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே விக்கிரவாண்டியில் நோட்டாவுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். அதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றால் என் கொள்கையின்படி கைபிரதி அடித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். 

News

இதுகுறித்து நீதிமன்றம் செல்வது எனக்கு தேவையற்றதா இருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு டி.ஏ கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பின்னும் அரசு இதுவரை டி ஏ கொடுக்கவில்லை ஒரு செக் மோசடி வழக்கில் ஈடுபட்டால் உடனே பணத்தை தர வேண்டும் என்று கூறி சிறையில் அடைகின்றனர். அதே போல் போக்குவரத்து மேலான இயக்குனர் மற்றும் பொது மேலாளரை ஏன் சிறையில் அடைக்கக் கூடாது. 

என்னுடைய மனு நிராரிக்கப்பட்டதற்கு ஆளுங்கட்சியோட தலையிட காரணமாகும் இங்கு 35பேர் நீக்கப்பட்டுள்ளனர் ஒருவருக்கு ஆயிரம் ஓட்டு என்றால் கூட 35ஆயிரம் வாக்குகள் பாதிக்கும். வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட 35பேரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள்.

Trichy News

ஆயிரம் ஓட்டில் தோற்றால் என்ன ஆவது என்ற பயத்தில் தான் ஆளுங்கட்சி தலையிட்டுடன் எங்களது வேட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

மேலும், 26ல் களம் தயாராக உள்ளது. எந்த சக்திகளும் தடுக்க முடியாது. போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்ல மற்ற சங்கங்களும் எங்களோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளனர். அப்போது தேர்தலில் சந்திப்போம் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended