ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

அந்தோணி ராஜ்

UPDATED: Jun 12, 2024, 6:21:14 AM

ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது - திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எம்.பி, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், எம்எல்ஏ தங்கபாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

கூட்டத்தில் தற்போது தென்காசி தொகுதி எம் பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள ராணி ஸ்ரீகுமார் பேச்சு :

40 தொகுதிகளிலும் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவர் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். இது எங்கள் தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

எனக்கு வாய்ப்பை அளித்த முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், கனிமொழி எம்பி, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், வெற்றிக்கு உழைத்த அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, 

என்னை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்றும் மக்களுக்கு உண்மையாக இருப்பேன். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் அமைச்சர், எம்எல்ஏ உதவியோடு செய்து கொடுப்பேன்.

கூட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு :

இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாமல் மாநிலம் முழுவதும் வெற்றியை சுவைத்த ஒரே கட்சி திமுக. மற்ற மாநிலங்களில் இரண்டாக மூன்றாகப் பிரிந்து கட்சிகள் இருந்தன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கிற கட்சி 40க்கு 40க்கு என்ற மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது வாக்காளர்களின் கருணை. வாக்காளர்களின் கொடை. தளபதி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை. 

தளபதியாரின் பரப்புரை, உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பரப்புரை. இந்த பரப்புரைகள் எல்லாம் தமிழக மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளீர்கள். இந்த வெற்றிக்கு நாங்கள் நன்றி கடனாக இப்பகுதி மக்களுக்கு அனைத்து நன்மைகளும் செய்து தருவோம். 

தற்போது நாங்கள் ரூபாய் 1000 வழங்கி கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருப்போம். இன்னும் பல நலத்திட்டங்களை எல்லாம் நம்முடைய முதல்வர் செய்ய இருக்கிறார்கள். அவர் உங்கள் முதல்வர். உங்கள் சகோதரர். உங்கள் வீட்டுப் பிள்ளை. 

நீங்கள் என்றென்றும் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் 20,000 வித்தியாசம் 40 ஆயிரமாக மாற வேண்டும். நம்முடைய ஊருக்கு சட்டமன்ற உறுப்பினர் நிறைய திட்டங்களை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். 

அதற்கு உதவியாக நான் இருந்திருக்கிறேன். நாங்கள் கேட்கும் அனைத்தையும் முதல்வர் செய்து கொடுத்து கொண்டே இருக்கிறார். நானும் அமைச்சர் தங்கம் தென்னரசு இணைந்து விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்போடு பணியாற்றுவோம் என்று சொல்லிக் கொண்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.

கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எம்பி பேச்சு :

இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத பெருமை திமுகவுக்கு தான் கிடைத்துள்ளது. 40க்கு 40 வென்று இந்தியாவே தளபதி மு க ஸ்டாலினை திரும்பி பார்க்க வைத்த மக்களின் பாதங்களைத் தொட்டு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இந்த தேர்தல் சாதாரணமாக நடைபெறவில்லை. நரேந்திர மோடி எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். நானும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் எம் அரசியலில் நீண்ட காலங்கள் இருக்கிறோம். எங்களுடைய வாழ்நாளில் ஒரு தேர்தலில் ஒரு பிரதமர் தமிழகத்திற்கு ஒருமுறை கூட வருவது கடினம். 

பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு வருவார் ஒரு கூட்டம் அல்லது இரண்டு கூட்டங்களுடன் சென்று விடுவார். அதற்கு பின்னால் வந்த இந்திரா காந்தி அம்மையார் தமிழகத்திற்கு வந்தால் சென்னை திருச்சியில் மதுரையில் பேசிவிட்டு சென்று விடுவார். இப்படி இந்தியாவை ஆண்டவர்கள் தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தது கிடையாது. 

ஆனால் நிரந்தர மோடி எட்டு முறை வந்தார். பத்திரிக்கையாளர்கள் பயமுறுத்தினார்கள். திமுகவை முடித்துவிட்டு தான் மோடி போவார். ஆட்சியை ஒழித்து விடுவார் என்று கருத்துக்கணிப்புகள் சொன்னார்கள். 

ஆனால் அத்தனையும் முறியடித்துக் காட்டி மூலையிலே மோடியை உட்கார வைத்த பெருமை வாக்காளப் பெருமக்களுக்கு உண்டு என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு ஒன்றை செய்தால் அதை நன்றியோடு பார்க்கும் எண்ணம் தாய்மார்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நான் அறிவேன். ஆயிரம் ரூபாய் வாங்கிய அனைத்து தாய்மார்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.

அடுத்ததாக நாங்கள் கட்டிய பாலம். நாங்கள் கட்டாத பாலமே கிடையாது. ஆனால் வெற்றிக்கு பாலம் உதவி செய்யவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்ததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தாய்மார்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்

அரசு அதிகாரிகள் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிதி நெருக்கடி, கடன் என்ற சூழலில் என்னால் முடியும் என்று கூறி அந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டியவர் ஸ்டாலின் அவர்கள். 

எம்ஜிஆர் உடன் பரப்புரைக்கு செல்லும்போது நானும் சென்று இருக்கிறேன். அவர் பேச தொடங்கியதும் பெண்கள் கூட்டம் அதிகமாக வரும். எம்ஜிஆருக்கு பிறகு பெண்கள் கூட்டம் அதிகமாக வருவது மு க ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே. 

இதற்கு முன்னால் ஆண்கள் ஓட்டு மட்டுமே திமுகவுக்கு கிடைத்து வந்தது. பெண்கள் ஓட்டு பெட்டியை திறந்தால் நாங்கள் தோற்று இருக்கிறோம். இந்த தேர்தலில் எம்ஜிஆருக்கு பெண்கள் வாக்கு எந்த அளவுக்கு விழுந்ததோ அதே அளவுக்கு உதயசூரியனுக்கும் விழுந்துள்ளது. 

இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் நமக்கு எதிராக செயல்பட்டனர். இஸ்லாமியர்கள் வாக்கு அதிகமாக இருந்த தொகுதிகளில் பல வாக்குகள் அழிக்கப்பட்டிருந்தது. கடையநல்லூர் தொகுதியில் 300 வாக்குகள், தென்காசியிலும் அதே நிலை. 

எத்தனை ஓட்டுகள் அழித்தாலும் அங்கு திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். திமுகவின் வெற்றிக்கு பல தடைகள் வந்தாலும் அதை முறியடித்துக் காட்டியவர் தளபதி ஸ்டாலின். ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றபோது மோடியை பார்ப்பதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் அவர்களை வந்து சந்தித்தார். 

பாஜக ஆட்சி எத்தனை காலம் இருக்கும் என்பது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அயோதியில் ஒரு ராமர் கோயில் கட்டினார்கள். ஆனால் அதற்கு முன்னதாக 30 ராமர் கோயில்களை இடித்தார்கள். நமது ஊரில் தெருவுக்கு ஒரு விநாயகர் கோயில் இருப்பது போன்று அயோத்தியில் ஒவ்வொரு தெருவிலும் ராமர் கோயில் இருந்தது.

ராமர் கோயிலை அயோத்தியில் கட்டுவதற்காக 30 ராமர் கோயில்களை புல்டோசர் வைத்து இடித்தார்கள். மேலும் அங்கிருந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வசித்த வீடுகளையும் இடித்தார்கள். அதன் விளைவு எந்த ராமர் கோயிலை வைத்து மோடி பரப்புரை செய்தாரோ அந்த அயோதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக சொன்னார்கள் எங்களை வளர்த்தது ராமர் அல்ல. ராமருக்கு சாமியாக இருந்த ராமசாமி. அந்த மண்ணிலே நிச்சயமாக தாமரை மலராது என்று சவால் விட்டு தேர்தலை முடித்து இருக்கிறார்கள். 

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் பாஜக சார்பில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. இது தவறாக இருந்தால் என் மீது வழக்கு தொடரலாம். ஆறு மாத காலமாக இந்த வேலை நடந்துள்ளது. 100 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். 

அண்ணாமலை என்பவர் போட்ட ஆட்டத்திற்கு எல்லை இல்லை. அவர் தோற்ற உடன் ஆடுகளை வெட்டுகிறீர்கள் என்று கேட்டனர். ஆடு வெட்டுவது பிரியாணி சாப்பிடுவதற்கு. ஆனால் அவர் வெற்றி பெற்றிருந்தால் ஆளையே வெட்டி இருப்பார். அந்த அளவுக்கு ஆணவும் மிக்கவர். அண்ணாமலைக்கு நான் தான் முதன்முதலில் ஆட்டுக்குட்டி என்று பெயர் வைத்தேன். 

அவர் திமுகவை குடும்ப அரசியல் என்று பேசினார். ஆனால் பாஜக மந்திரி சபையில் 16 பேர் அரசியல் வாரிசுகள். 243 பாராளுமன்ற உறுப்பினர்களில் 50 பேர் அரசியல் வாரிசுகள்.

எந்த அளவுக்கு இஸ்லாமியர்கள் மீது கோபம் இருந்தால் 1952 லிருந்து இதுவரை இஸ்லாமியர்கள் இல்லாத மந்திரி சபை கிடையாது. இதுதான் முதல் முறை. இந்த ஆட்சி நீடித்தால் நிலைமை என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

பெரியார் பிறந்த மண்ணில் ஒரு பார்ப்பானை கூட மந்திரி ஆக்காத அரசு திமுக அரசு. தமிழ்நாட்டில் தளபதி போல் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ். இவரும் ராகுல் காந்தியும் கை கோர்த்ததன் விளைவு உத்திர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி பாஜக கூட்டணியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

சில மாநிலங்களில் கட்சிகள் தனியாக நின்று தோற்றுவிட்டனர். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போக மாட்டான் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் ஸ்டாலின் அவர்கள். கடந்த தேர்தலில் 24 இடங்களில் நேரடியாக போட்டியிட்ட திமுக இந்த முறை 22 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.

மற்ற இடங்களை கூட்டணி கட்சிக்கு ஸ்டாலின் ஒதுக்கினார். அதனால்தான் 40க்கு 40 நாம் வெற்றி பெற்றோம். வரும் காலங்களில் இந்தியாவில் எந்த முடிவு எடுத்தாலும் மு க ஸ்டாலினை கேட்காமல் எடுக்க முடியாது என்ற காலகட்டம் உருவாகியுள்ளது. 

மோடி ஆட்சி எத்தனை ஆண்டு காலம் இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. கூட்டணியில் சண்டை உருவாகியுள்ளது அவரது ஆட்டம் இனி பலிக்காது.

2019 இல் இருந்து திமுகவுக்கு தொடர் வெற்றி கிடைத்து வருகிறது. சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். 

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கூட்டணி ஒரு தேர்தலில் இருந்தால் அடுத்த தேர்தலில் இருக்காது. 

ஆனால் ஏறத்தாழ ஐந்து ஆண்டு காலம் ஒரு கூட்டணியை மாறாமல் வைத்திருந்த தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள். பல கட்சிகளுக்கு நாம் தான் அங்கீகாரம் வாங்கி கொடுத்தோம். 

வரும் கூட்டுறவு தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற தேர்தல் வரும். அந்த தேர்தலில் மு க ஸ்டாலின் அவர்களை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க இப்போது இருந்தே நாம் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்.

 

VIDEOS

Recommended