முதல்வர் முக.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் சாலை மறியல்
லட்சுமி காந்த்
UPDATED: Jun 24, 2024, 11:41:29 AM
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ் அவர்கள் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் சுமார் 60 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இன்னும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றார்கள்.
20க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பார்வை முழுமையாக செழலிழந்து விட்டது. இப்படிப்பட்ட மிக கொடுரமான சம்பவம் விடியா திமுக அரசின் கையாலாகதனத்தை தோலுரித்துக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய, திமுக அரசைக் கண்டித்தும்,
கள்ளச் சாராயம் அருந்தியதால் 60க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசின் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறை என கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.