லால்குடி எம்எல்ஏ ராஜினாமா செய்து விட்டாராமே - போப்பா... போப்பா... திருச்சியில் கடுப்பான அமைச்சர் கே.என்.நேரு.
JK
UPDATED: Jun 16, 2024, 8:38:30 AM
திருச்சி மாவட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது எனவும், டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமைச்சர் நேருவின் தரப்பினர் சிலர் துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தொகுதியின் எம்.எல்.ஏக்களுக்கு பிரச்சனை ஏற்படுவதாகவும், அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சியில் பேசப்படுகிறது.
ஆனால் எம்.எல்.ஏக்கள் அதனை யாருமே இதுவரை வெளிகாட்டிக் கொள்ளவில்லை என செல்லப்படுகிறது.
லால்குடி தொகுதியில் தான் கே.என்.நேரு முதன் முதலாக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். சொந்த கிராமமான காணக்கிளியநல்லூர் இந்த தொகுதியில் தான் வருகிறது.
திருச்சியில் போட்டியிட முடிவு செய்த போது தொகுதியில் நேருவால் கை காட்டப்பட்டவர் தற்போதைய எம்.எல்.ஏவாக பதவி வகிக்கும் சவுந்தரபாண்டிய தான்.
இவர் 4முறை லால்குடி தொகுதியில் வெற்றி பெற வைத்தவர் கே.என்.நேருதான் என்பது வெளிப்படையானது.
ஆனால் தான் சொல்வதை மட்டும தான் கேட்க வேண்டும் என்பதும், நேருவின் செயல்பாடும் சவுந்தரபாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என தொகுதியில் வெளிப்படையாக கட்சியினராலும், எம்.எல்.ஏவின் ஆதரவளர்களால் பேசப்படுகிறது.
இந்நிலையில் லால்குடி பகுதியின் அரசு நிகழ்ச்சிக்கு , தொகுதியின் எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுக்கு அழைப்புதல் விடுக்கவில்லை. குறிப்பாக கடந்த சில மாதங்களாக லால்குடி பகுதியில் எந்த திட்டங்களை தொடங்கினாலும் அதற்கு முறையான அழைப்பு எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அரசு அதிகாரிகள், அமைச்சர் நேரு அவரின் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ வை , ஓரங்கட்டுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் நேருவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த எம்எல்ஏ சௌவுந்தர பாண்டியன் , சமூக வலைதளத்தில் தான் இறந்து விட்டதாக தானே பதிவிட்டது,
தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கடிதம் எழுதியது திருச்சி திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்வலையும், அதர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து எம்.எல்.ஏ சௌந்தர்பாண்டியனிடம் லால்குடி பகுதி செய்தியாளர்கள் கேட்ட போது. நான் தான் இந்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். மேலும் இதைபற்றி விரிவாக பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு , லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட தனது பதிவினை அகற்றிவிட்டார்.
இந்நிலையில் இன்று திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் காவேரி மருத்துவமனையின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்
லால்குடி எம்எல்ஏ சௌவுந்தரபாண்டியன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்கு உங்களுடைய பதில் என்று கேள்விக்கு?
லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அவர்களை நேரில் அழைத்து பேசி விட்டேன்.
ஏற்கனவே சௌந்தரபாண்டியன் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு கொடுத்துள்ளாரா என்ற கேள்விக்கு ?
தம்பி போப்பா.. போப்பா என பதிலை கூறிவிட்டு சென்றார்.