ராஜித குற்றசாட்டு பதிவிலகவும் தயார் கபீர் பதில்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jul 12, 2024, 10:48:08 AM
ராஜித சேனாரத்ன முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜனாமா செய்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு.
கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டே இளைஞர்களை ஒன்று திரட்டினோம். மாவனல்லை தொகுதியில் இருந்து இளைஞர் மாநாட்டிற்கு வருகை தந்த இளைஞர்களுக்கு சாப்பாட்டுப் பொதிகள் வழங்கப்பட்டதாக ராஜித சேனாரத்ன பொய்யான கருத்துக்களை வெளியிட்டமைக்கு வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
அண்மையில் எனது வீட்டில் நடந்த கூட்டம் தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட சில கருத்துக்களை ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்தார். அந்த கூற்றை அன்று நான் சரி செய்ய முற்படவில்லை.
கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எனது வீட்டில் கூடி கலந்துரையாடினர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான வியூகங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் குறைபாடுகள், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை வெளிப்படையாகப் பேசினோம். இவற்றையே கலந்துரையாடினோம்.
ஆனால் ராஜித சேனராத்ன இதனை திரிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பில் கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாட்டிற்கு, மாவனல்லை தொகுதியில் இருந்து இளைஞர் மாநாட்டிற்கு வருகை தந்த இளைஞர்களுக்கு சாப்பாட்டுப் பொதிகள் வழங்கப்பட்டே வரவழைக்கப்பட்டனர் என ராஜித சேனாரத்ன பொய்யான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இது முற்றிலும் தவறான கருத்து. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நாட்டின் இளைஞர் சமூகத்தை இழிவுபடுத்த வேண்டாம் என ராஜித சேனாரத்னவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
தங்களின் மனசாட்சியின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து, சஜித் பிரேமதாசவின் செய்தியை அறிந்து கொள்வதற்காகவே இளைஞர்கள் மாநாட்டிற்கு வருகை தந்தனர். சோற்றுப் பொதிக்காகவே இளைஞர்கள் கூட்டத்திற்கு வருகை தந்ததாக ராஜித சேனாரத்ன கூறியிருந்தால் அது தவறு. இன்றைய இளைஞர் சமூகம் இவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்படவில்லை.
ராஜித சேனாரத்னவின் இந்தக் கூற்றால் கேகாலை மாவட்ட இளைஞர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.
சாப்பாட்டு பொதி வழங்க இளைஞர் மாநாட்டுக்கு இளைஞர்களை திரட்டியதாக ராஜித சேனாரத்ன அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜனாமா செய்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்தார்.