• முகப்பு
  • அரசியல்
  • இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி

இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி

ராஜா

UPDATED: Jun 4, 2024, 6:50:44 PM

நாடு முழுவதும் 18 வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது இதில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஒரே கட்டமாக புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டது தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் அவர்கள் களமிறங்கினார்.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பி டி நாராயணசாமி அவர்களும் பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தினகரன் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதன் ஜெயபால் அவர்களும் மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்கினார்கள்.

இதில் தேனி பாராளுமன்ற தொகுதியில் சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 23 கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்களாக அறிவிக்கப்பட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேனி தொகுதியில் திமுக கூட்டணியில் ஆன இந்தியா கூட்டணி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதியாக 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் கட்சியின் ஆதரவாளர்களுடன் வந்து தேனி தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆர்.வி சஜீவனா அவர்களிடம் வெற்றி சான்றிதழை பெற்று பின்னர் செய்தியாளர் சந்திப்பில் திமுகவின் மூன்றாண்டுகள் சாதனையின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி என கூறிச் சென்றார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended