• முகப்பு
  • அரசியல்
  • மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில், போட்டி மிகு விலைமனு கோரல் இன்றி கோடிக்கணக்கான பணம் மோசடி அரசை சாடும் சஜித்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில், போட்டி மிகு விலைமனு கோரல் இன்றி கோடிக்கணக்கான பணம் மோசடி அரசை சாடும் சஜித்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 29, 2024, 5:14:13 AM

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில், போட்டி மிகு விலைமனு கோரல் இன்றி கோடிக்கணக்கான பணம் மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

original/20240629_102319
மன்னார் பகுதியில் 500 மெகாவாட் காற்றாலை திட்டத்தை அமைக்க அரசாங்கம் உடன்பாடு எட்டியதாகவும், போட்டி முறையை பின்பற்றாமல் மின் உற்பத்தி அலகொன்றுக்கு 8.26 டொலர்கள் செலவழித்து ஒப்பந்தத்தில் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையால் குறைந்த தொகையில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு பறிபோயிருப்பதாகவும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் முறைகேடாக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார சபையின் 50 மெகாவாட் திட்டத்திற்கான போட்டி மிகு விலைமனு கோரல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 50 மெகாவாட் உற்பத்தி அலகின் கொள்வனவு விலை 4.8 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி முறையின்றி 500 மெகாவாட் காற்றாலை உற்பத்தி அலகின் விலை அதிகமாக இருப்பதை அவர் வலியுறுத்தினார். 

original/20240629_102039
நாட்டின் வளங்களை சூறையாடி, அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளையடிப்பவர்கள் யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அரசு திருட்டு முறையில் செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய இராணுவ வீரர்கள் சக்தியின் 7 ஆவது மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போது, நாட்டின் வளங்களைச் சூறையாடியவர்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் மூலம் பதவி நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

VIDEOS

Recommended