• முகப்பு
  • அரசியல்
  • தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை - ஆர். காமராஜ் 

தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை - ஆர். காமராஜ் 

ஜெயராமன் & தருண் சுரேஷ்

UPDATED: Apr 25, 2024, 10:42:57 AM

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயிலும் தன்னுடைய கோர முகத்தை காட்டுகிறது.

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர். அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்

இதனால் தமிழக முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்டம் தோறும் நீர் மோர் பந்தல் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அறிவித்திருந்தார்

அதன் ஓரு பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நீர், மோர் , பந்தல், அமைக்கப்பட்டது இதனை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் ,மோர் , இளநீர் தர்பூசணி, நுங்கு, வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் கழக அமைப்பு செயலாளர் சிவராஜாமாணிக்கம் ,மேற்கு ஓன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட மாவட்ட , ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் :

அப்போது தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உள்ளிட்ட எந்த தேர்தல் நடந்தாலும் அதில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டியாக இருக்கும் வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்ச பழக்கத்தால் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் தமிழக அரசு உடனடியாக போதைப் பழக்கத்தை தடை செய்ய முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா பழக்கத்தால் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை தமிழக அரசு உடனடியாக போதைப் பழக்கத்தை தடை செய்ய முன்வரவேண்டும் என தெரிவித்தார்.



  • 4

VIDEOS

Recommended