• முகப்பு
  • அரசியல்
  • பாஜக காவேரி நீரை தமிழகத்திற்கு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தால் கர்நாடகாவில் தோற்றுவிடும் என்ற தோல்வி பயம் - சீமான்

பாஜக காவேரி நீரை தமிழகத்திற்கு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தால் கர்நாடகாவில் தோற்றுவிடும் என்ற தோல்வி பயம் - சீமான்

செ.சீனிவாசன்

UPDATED: Apr 14, 2024, 5:26:20 PM

தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது

இந்த நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாகை அபிராமி அம்மன் திருவாசகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்

அப்போது இந்தியா கூட்டணி என்பது கூட்டணியா கேரளாவுக்குள் எதிர்க்கட்சியாகவும் கேரளாவுக்கு வெளியே கூட்டணியாகவும் செயல்படுவது கூட்டணியா கூட்டணி தர்மமா என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கட்ச தீவைப் பற்றி ஒப்புக்கு பேசுவதாகவும் பத்தாண்டு கால ஆட்சியில் மீட்டருக்கு வேண்டும் எனவும் அவர்களால் காவேரி நதிநீரை கூட தமிழகத்திற்கு பெற்றுத்தர முடியவில்லை

தேர்தல் வாக்குறுதியில் கூட அவ்வாறு கூறவில்லை காவேரி நீரை பெற்று தருவதாக பாஜக அறிவித்தால் கர்நாடகாவில் தோற்றுவிடும் என்ற தோல்வி பயம் எழுந்துவிட்டது எனவும்.

அடிமை இந்தியாவிலிருந்து ஆர் எஸ் எஸ் இருப்பதாகவும் பாரதிய ஜனதா என்ற கட்டிடத்தில் அண்ணாமலை ஒரு செங்கலாக உள்ளவர் அவர் நாம் தமிழர் கட்சியை அழித்து விடுவதாக வாய்ச்சவடால் விடுகிறார் என அண்ணாமலையை எச்சரித்து பேசினார்.

தொடர்ந்து நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு மை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

VIDEOS

Recommended