• முகப்பு
  • அரசியல்
  • நல்லடக்கமா மற்றும் எரிப்பா என்ற பிரச்சினைகளின் போது சில முஸ்லிம் தலைவர்களும் கோட்டாபய சொன்ன விடயங்களை அனுமதித்தார்கள்

நல்லடக்கமா மற்றும் எரிப்பா என்ற பிரச்சினைகளின் போது சில முஸ்லிம் தலைவர்களும் கோட்டாபய சொன்ன விடயங்களை அனுமதித்தார்கள்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 15, 2024, 11:01:32 AM

முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மத உரிமைக்காக அன்று ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது. ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்ற பிரச்சினையின் போது தேசியத் தலைவர்கள் என்று கூறிக் கொள்கின்ற ரணிலும் அநுரவும் அந்த மோசமான கொள்கைக்கு எதிராக குரல் எழுப்ப முடியுமாக இருந்த போதிலும் அவர்கள் அதற்காக முன் வரவில்லை.

original/dofoto_20240915_162510531
கோட்டாபய ராஜபக்சவின் அன்றைய பிழையான கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமே வீதிக்கிறங்கி போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச தெரிவித்தார .

அன்றைய சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்ச செய்த இந்த விடயங்களை சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அனுமதித்தார்கள். இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவரும் இன மத பேதங்களை மறந்து இனவாதத்தை, மதவாதத்தை துறந்து அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழும் வகையில் நாட்டை வலுப்படுத்தி ஐக்கிய படுத்துவோம். மக்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 56 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 14 ஆம் திகதி அக்கரைப்பற்று நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

 இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்கி குறைந்த தொகையில் குறைந்த செலவில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வழியமைப்போம். இதற்கு மேலதிகமாக மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும் வறுமை அதிகரித்து காணப்படுகின்றமையால் நாட்டு மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

 எனவே வறுமையை ஒழிப்பதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அதனூடாக வரிய குடும்பம் ஒன்றுக்கு 24 மாதங்களுக்கு மாதம் ஒன்று தலா 20000 ரூபா வீதம் ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடக்கி வறுமையை போக்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம். அத்தோடு சர்வதேச தரத்திலான இளைஞர் மத்திய நிலையங்களை உருவாக்கி அதன் ஊடாக இளம் தலைமுறையினருக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழிக்கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு என்பவற்றை பெற்றுக்கொண்டு சிறந்த தேர்ச்சியையும் ஆளுமையையும் விருத்தி செய்து கொள்வதற்கான சூழலை ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.



 

VIDEOS

Recommended