• முகப்பு
  • அரசியல்
  • கும்பகோணத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தவறான தகவல் தருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி.

கும்பகோணத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தவறான தகவல் தருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி.

ரமேஷ்

UPDATED: Apr 12, 2024, 6:46:03 AM

கும்பகோணத்தில் முன்னால் அமைச்சர் ஓ எஸ் மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல் டீசல் விலை கடந்த 10 ஆண்டுகளில் வெளியேற்ற விகிதாச்சாரத்தை திமுக அரசு தவறான தகவல் தந்து இதற்கு காரணமானவர்களை வாக்குகளால் விரட்டி அடிப்போம் என்று கூறுவது பொய் தவறான தகவல் தருகிறார் முதலமைச்சர் தவறான தகவல் தருகிறார்.

இதைச் சொல்லி ஓட்டு கேட்பவர்களை விரட்டி அடிப்போம் என்று முதலமைச்சர் சொல்கிறார். இவர் யாரைச் சொல்கிறார் என்று அவரே சிந்தித்துப் பார்க்க வேண்டும். திமுகவையும் உதய சீரியலையும் பொதுமக்கள் வாக்குகளால் விரட்டி அடிக்க வேண்டும்.

மத்திய அரசின் வரியை விட மாநிலத் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையில் கூடுதலாக வசூல் செய்கிறது. திமுக சொல்லும் தேர்தல் வாக்குறுதிகள் ஒரு காலத்திலும் செய்ய முடியாத வாக்குறுதிகள் பொய்யான, மோசடியான வாக்குறுதிகள்.

செல்வப் பெருந்தகை விவரம் இல்லாமல் பேசுகிறார் பாரதிய ஜனதா கட்சியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என பலமுறை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். செல்வப் பெருந்தகை திடீர் தலைவரானவர். திமுகவின் விசுவாசி. அதிமுகவின் நிலைப்பாட்டை தேவையில்லாமல் தவறாக விமர்சித்து வருகிறார். அவர் பேச்சில் எந்தப் பயனும் இருக்காது.

நீட் தேர்வு வேண்டாம் என ஜெயலலிதா சொல்லவில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு நீட் தேர்வை செயல்படுத்துங்கள் அதற்குள் நாங்கள் எங்களை தயார் செய்து கொள்கிறோம் என ஜெயலலிதா கூறினார்.

பிரதமர் வேட்பாளரை பொறுத்தவரை தேர்தல் முடிந்த பிறகு அதிமுக உள்ளிட்ட மாநில அளவில் உள்ள பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும்.

அதிமுக தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என அண்ணாமலை கூறுவது மந்திரவாதி பேசுவது போல் உள்ளது.

ஜூன் 4-ம் தேதி நாமெல்லாம் இதனைப் பார்க்கத்தான் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்ட செயலாளர்கள் பவுன்ராஜ், பாரதிமோகன், மாநகர செயலாளர் ராம ராமநாதன், ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIDEOS

Recommended