பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மிகச்சிறந்த அடிமையாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
JK
UPDATED: Apr 13, 2024, 1:11:46 PM
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ளது உப்பு சத்தியாகிரக நினைவு தூண். அதன் நினைவு நாளை முன்னிட்டு இன்று உப்பு சத்தியாகிரக நினைவு தூணுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் நிர்வாகிகள் சுப சோமு, வேலுச்சாமி திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் நிர்வாகிகள் கலை உட்பட பலர் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை உப்பு சத்தியாகிரக வரலாறு மோடிக்கும் தெரியாது, அண்ணாமலைக்கும் தெரியாது.
ஜெனரல் டயர் சுதந்திர போராட்ட வீரர்களை சுட்டு கொன்றார். இன்று மோடி மறைமுகமாக அணு அணுவாக சிறுபான்மை, விழிம்பு நிலை மக்களை சுட்டு வருகிறார்கள். பெண்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லை.
உப்பு சத்தியாகிரகம் என்றால் என்ன என்பது குறித்து மோடியும் அண்ணாமலையும் தெரிந்து கொள்ள வேண்டும், அது குறித்து பேச வேண்டும்.
வெறுப்பு அரசியலை வட மாநிலங்களில் செய்து முடித்து விட்டு. தற்போது தென் மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலையும் பிரித்தாலும் சூழ்ச்சியையும் செய்ய பா.ஜ.க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை.
தேசத்தை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்ததை தமிழ்நாடு மக்கள் புறந்தள்ளுவார்கள்.
திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண் தேர்தலுக்கு பின்னர் சீரமைக்கப்படும் அரசு சார்பில் சீரமைக்க தாமதமானால் காங்கிரஸ் தன் சொந்த செலவில் செப்பணிப்படும் பணியை மேற்கொள்வோம்.
ராகுல் காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சி இருக்கிறது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
திருட்டு, வெறுப்பு, மதசாதி அரசியலை பா.ஜ.க செய்து பார்க்கிறது அதற்கு இந்திய மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
பொய்யும் பித்தலாட்டம் செய்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள். மீண்டும் இந்தியாவை பின்னுக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
நாட்டை பின்னுக்கு தள்ளியவர் மோடி இயக்கம் பாஜக அந்த பாஜகவின் துரோக முகமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அவர் தமிழின துரோகியாக செயல்பட்டு வருகிறார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மிகச்சிறந்த அடிமையாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மோடி மாடல் ஆட்சி இப்படி தான் நடக்கும்.
அவர்கள் செய்வது அராஜகத்தின் உச்சம். இதற்கு முடிவு வந்து விட்டது. ஜனநாயகத்தை காக்கவும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கவும் இந்திய மக்கள் தயாராகி விட்டார்கள். அவர்கள் மோடியை அரசியல் களத்தில் இருந்தும் அதிகார களத்தில் இருந்தும் அப்புறப்படுத்துவார்கள்.
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு குற்ற பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சாரம் செய்தால் அவமானமாக போய்விடும் என தெரிந்து பிரதமர் மோடி தன்னுடைய பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்.
காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என தெரிவித்தார்.