புத்தளத்தில் நண்பகல் வரை 42% வாக்கு பதிவு - எச்.எம்.எஸ்.பீ.ஹேரத்

ரஸீன் ரஸ்மின்

UPDATED: Sep 21, 2024, 9:44:53 AM

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது. இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரையிலான வாக்கு பதிவு சதவீதம் 42% என தெரிவித்து, புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

original/whatsapp-image-2024-09-21-at-13
புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் குறித்து அவர் மேலும் கூறியதாவது, இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளதாகவும், இதுவரை எந்தவித குற்றச்சாட்டு அல்லது வன்முறை சம்பவங்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளின் 470 வாக்களிப்பு நிலையங்களில் அமைதியாக வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு தேவைக்காக பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மேலும், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் வாக்களிப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.

 original/whatsapp-image-2024-09-21-at-13
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் புத்தளம் சென்.ஆன்றூஸ் மத்திய கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி மற்றும் செய்னப் ஆரம்ப பாடசாலை ஆகிய வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும். அதேபோல், இந்த பகுதிகள் கடுமையான பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கும்.

 

புத்தளம் மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளில் 6,63,673 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 

VIDEOS

Recommended