• முகப்பு
  • மருத்துவம்
  • திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை - பத்திரிக்கை நிருபர்களுக்கு அடிப்படை வாழ்வியல் முதலுதவி (Basic Life Support) பயிற்சி.

திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை - பத்திரிக்கை நிருபர்களுக்கு அடிப்படை வாழ்வியல் முதலுதவி (Basic Life Support) பயிற்சி.

JK 

UPDATED: Mar 9, 2024, 10:58:59 AM

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நிருபர்கள் பயிற்சித் திட்டத்திற்கான அடிப்படை வாழ்வியல் முதலுதவி (Basic Life Support) விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மக்களுக்கு ஆபத்தான குழ்நிலைகள் ஏற்பட்டால் நிருபர்கள் முதலில் பதிலளிப்பவர்களாக இருப்பார்கள்.

ஒருவர் ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டால் உடனடியாக முன் வந்து அடிப்படை முதல் உதவி செய்து அவர்களை காப்பாற்ற உதவுகிறது.

Also Watch :கும்பகோணத்தில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா.

ஸ்வீடேனில் சுமார் 70% இதய நோயால் (கார்டியாக் அட்டாக்) பாதிக்கப்பட்டவர்கள் முதல் பதிலளிப்புகளால் உடனடி சிகிட்ச்சை பெறுகிறார்கள். அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 40% ஆகும், அதே சமயம் இந்தியாவில் 2% மக்கள்மட்டும் CPRயில் பயற்சி பெற்றுள்ளனர்.

எனவே, இது போன்ற பயற்சி திட்டங்கள் மூலம் உயிர்காக்கும் திறன்களில் பயற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், இதன் விளைவாக இதய பாதிப்பு அல்லது மோசமான நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி விரைவாக கிடைக்கப்படும். உயிர் காக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

Also Watch : திருவாவடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆறாம் ஆண்டு ருத்ர நாட்டிய அஞ்சலி கோலாகலமாக நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மூத்த இருதயநோய் சிறப்பு நிபுணர் மருத்துவர்கள் காதர் சாஹிப் 

ஒருவரின் உயிர்காக்கும் செயல்முறையை இது கணிசமாக மேம்படுத்துகிறது. இதயம் திடீரென மற்றும் எதிர்பாராத விதமாக பம்ப் செய்வதை நிறுத்தும் போது இதய நிறுத்தம் ஏற்படுகிறது.

Also Watch : கும்பகோணத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

இது நடந்தால், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்படும். CPR கொடுக்கப்பட்டால் மூளைச் சாவு தடுக்கப்படுகிறது. எனவே நிருபர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வார்கள் அவர்கள் பலரை சந்திக்கிறார்கள்.

அவசரகால சூழ்நிலையில் கற்றுக்கொண்டு செயல்படுத்துவார்கள். இது அனைவருக்கும் பயன் பெரும் வகையில் இருக்கிறது. 

Also Watch : தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்குள் சொறிநாயை அழைத்து வந்த கவுன்சிலர்

தொடர்ந்து அவசர சிகிச்சை மருத்துவர். ஸ்டீபன்பிரகாஷ், அருள்தாஸ் பேசுகையில் :

அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி (Basic Life Support) விழிப்புணர்வு பயிற்சியானது சுகாதார நிபுணர்களுக்காக மட்டுமல்ல, CPR திறன்களை எவ்வாறு செய்வது என்பதை அறிய வேண்டிய பிற பணியாளர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடத்திட்டத்தில், மாரடைப்பு, மார்பு அழுத்தங்கள் பாதிக்கப்பட்டவர்கள் சுவாச பாதையை நிர்வகித்தல் சுவாசத்தை வழங்குதல் தானியங்கி வெளிப்புற ட்ரிபிலேட்டரை பயன்படுத்தி வருகிறது.

Also Read : பெரம்பலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு 10க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

சிறப்பாக பயிற்சி பெற்ற நபர்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே வழங்குகிறார்கள் இதனால் பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது என தெரிவித்தார்.

பேட்டியின் போது மருத்துவமனை தலைவர் ஜெயராமன் மருத்துவர் நிர்வாகி மருத்துவர் சிவம் செயல்பாட்டு பொது மேலாளர் சங்கீத் மார்க்கெட்டிங்மேலாளர் ஆனந்த் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended