• முகப்பு
  • லஞ்சம்
  • திருச்சி அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் -  சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை

திருச்சி அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் -  சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை

JK 

UPDATED: Mar 1, 2024, 7:45:38 PM

திருச்சி கே. கே. நகர் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் கோபால கிருஷ்ணன்(65) இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாகவும், அதற்காக இன்று திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள்.

Also Read : கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மதுபான கடையை அகற்றவில்லை என்றால் 5 மது பான கடையை அடித்து நொறுக்குவோம் - பாமக.

இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் கடந்த மாதம் 27ம் தேதி அன்று திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த சார்பதிவாளர் சபரிராஜன் என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார்.

அதற்கு திருவெறும்பூர் சார்பதிவாளர் சபரிராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் விதம் இரண்டு பத்திரத்திற்கு ரூபாய் 20ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

Also Read : முப்படைகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கலாம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர்ராணி குழுவினருடன் 1.4.2024 மாலை 5மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன்

Also Watch : 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது இக்காட்சியை பார்க்கும் போது பழைய நினைவுகள் நமக்குள்ளே வந்து செல்கின்றது

கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரிராஜன்(41) தனிநபர் சூர்யா (24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்சப் பணம் பெற்றது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Watch : ஜாபர் சாதிக் விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்திப் பேசுவது வருத்தமளிக்கிறது -வீடியோ வெளியிட்டு இயக்குநர் அமீர் விளக்கம்

சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended