- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மதுபான கடையை அகற்றவில்லை என்றால் 5 மது பான கடையை அடித்து நொறுக்குவோம் - பாமக.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மதுபான கடையை அகற்றவில்லை என்றால் 5 மது பான கடையை அடித்து நொறுக்குவோம் - பாமக.
ரமேஷ்
UPDATED: Mar 1, 2024, 7:18:46 PM
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு தெற்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர் கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் குமார், தலைமையில் ஏஜிஆர் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜோதிராஜ், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர், மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Also Watch : 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது இக்காட்சியை பார்க்கும் போது பழைய நினைவுகள் நமக்குள்ளே வந்து செல்கின்றது
இதில் 2026ல் சட்டமன்ற தேர்தலில் பாமக உறுதியாக ஆட்சி அமைக்கும். அதற்கு ஒரு முன்னோட்டம் தான் 2024 ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த செயல்வீரர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Also Watch : மயிலாடுதுறை அருகே ஐந்து ஆலயங்களின் கும்பாபிஷேகம்
தொடர்ந்து மகளிரணி மாநில செயலாளர் பானுமதி சத்தியமூர்த்தி தெரிவித்து போது கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மது பானம் கடைகள் உள்ளன இந்த மதுபான கடைகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
இந்த மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் இல்லையென்றால் அனைத்து மகளிர் ஒன்று திரட்டி மதுபான கடையை அடித்து நொறுக்குவோம் என்று தெரிவித்தார்.