வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் ஊடக வியலாளர்களுக்கு செயலமர்வு
கண்டி - ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Mar 3, 2024, 5:55:18 PM
கண்டி திலங்கா ஹோட்டலில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் ஊடக வியலாளர்களுக்கு செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
இச் செயல் அமர்வில் தொழில் மற்றும் வெளி நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணயக்கார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Also Read.வடக்கு பிராந்திய ஊடகவியலாளர்களின் பயிற்சி பற்றறை நிறைவு
அங்கு அவர் உரையாற்றும் போது தெரிவித்தாவது-
இன்றைய காலக்கட்டத்தில் இலங்கையின் பொருளாதாரத்துறைக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. சுமார் 20 இலட்சம் பேரளவில் வெளிநாடுகளில் இருந்து தம் உடல் உழைப்பை உள்நாட்டுக்காக அனுப்பி வருகின்றனர்.
இப்படியான ஒரு நிலையில் ஓரிரு துற்சம்பவங்கள் நடக்க முடியும். அதிலும் அனேகமானவை போலிச் செய்திகளாக உள்ளன. அதாவது சிலர் நட்ட ஈடுகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள அல்லது குற்றத்தில் இருந்து தப்பிக் கொள்ள சில விபரீத முடிவுகளை எடுக்கி்னறனர். நாடகமாடுகின்றனர்.
Also Read.மாற்றுத்திறனாளியை அழைத்து பரிசளித்த ராஜாங்க அமைச்சர்
இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் அவ்வாறான ஜனப்பிரியமான செய்திகளை அதிகம் வெளியிட்டு வருகின்றன. அதனை விட வெளிநாட்டு வேலை வாய்புப் பணியகம் பாரிய நன்மைகளைச் செய்து வருகிறது இது பற்றி பொதுமக்கள் அறிந்திருப்பது மிகவும் குறைவாகவே உள்ளன.
எனவே ஊடகங்கள் எதிர் விளைவுகளை ஏற்கடுத்தும் செய்திகளை நேர் விளைவுகளை ஏற்படுத்தும் செய்திகளாககத் தர முயற்சிக்க வேண்டும். எனவேதான் இலங்கையின் பிரபலமான ஊடக வியலாளர்களை அழைத்து வந்து இச் செயலமர்வை நடத்துகிறோம் என்றார்.
Also Read.125 பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு
செயலமர்வு முடிவில் ஊடக வியலாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.