வடக்கு பிராந்திய ஊடகவியலாளர்களின் பயிற்சி பற்றறை நிறைவு
யாழ் - பிரதீபன்
UPDATED: Feb 2, 2024, 3:47:08 PM
வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரனையின் கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில்,யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,
அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், வெளிநாட்டு செய்தி பகுப்பாய்வாளருமான மோகான் சமரநாயக்க, தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான மஹிந்த பத்திரன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி நயனா சுரவி, வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் கே.பி ஜயந்த், வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.செவ்வந்தி, வெகுசன ஊடக அமைச்சின் சட்ட அதிகாரி திருமதி. யுரேகா வேலாரத்ன, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடகப் பகுப்பாய்வாளர் சதுரங்க ஹபு ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலில் இப் பயிற்சிப்பட்டறை திறம்பட முன்னெடுக்கப்பட்டிருந்தது.