• முகப்பு
  • இலங்கை
  • மாற்றுத்திறனாளி மாணவனை அழைத்துப் பாராட்டிப் பரிசளித்த கல்வித்துறை இராஜாங்க அமைச்சர்

மாற்றுத்திறனாளி மாணவனை அழைத்துப் பாராட்டிப் பரிசளித்த கல்வித்துறை இராஜாங்க அமைச்சர்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jan 14, 2024, 5:11:14 PM

அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவனை அழைத்துப் பாராட்டிப் பரிசளித்த கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் 

பலாங்கொடையில் இயங்கி வரும் ஆர் பி சி சி தமிழ் வித்யாலயாவில் 4ஆம் வகுப்பு பயின்று வரும் மல்டி டிஸ்ஆர்டர் ஆட்டிசம் நோயினால் 70 வீதம் பாதிக்கப்பட்டுள்ள 9 வயதான மாற்றுத்திறனாளி சிறுவனான பாக்கியராசா முரளிதரம்‌, அவருடைய ஆசிரியர்களின் கடுமையான பயிற்சி மற்றும் தீவிர முயற்சியின் காரணமாக தன்னுடைய அதிக ஞாபகத் திறனின் மூலம் உலக நாடுகளின் தலை நகரங்களை அவற்றின் கொடிகளை வைத்து அடையாளம் காட்டுதல், உலக நாடுகள் ஒவ்வொன்றினதும் நாணயங்கள்,

ஒவ்வொரு நாடுகளிலும் பேசப்படும் மொழிகள், உலக நாடுகளின் தற்போதைய தலைவர்கள் பற்றி, 

இலங்கை ,உலக நாடுகள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பொது அறிவு கேள்விகளுக்கான பதில்கள் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவித்த அதேவேளை, உலக வரைபடத்தில் நாடுகளின் அமைவிடங்களையும் அடையாளப்படுத்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.

மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள அந்த மாணவனை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார் கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த் குமார் அவர்கள். மாணவன் அங்கிருந்தவர்களின் பல நூறு கேள்விகளுக்கு தொடர்ந்து 2 மணி நேரமாக நேர்த்தியாகப் பதிலளித்தார். மாணவனின் அற்புதமான ஞாபகத்திறனைக் கண்டு வியந்த அமைச்சர் அவரை வெகுவாகப் பாராட்டிப் பரிசளித்த அதேவேளை, மாணவனின் திறனை மேலும் வளர்ப்பதற்காக எதிர்காலத்தில் தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெருமாள் நீலமேகம் மாணவனின் ஆசிரியை திருமதி.சுந்தரம் எளிசபத்‌ மற்றும் மாணவனின் தாய் உடனிருந்தனர்

VIDEOS

RELATED NEWS

Recommended