• முகப்பு
  • மருத்துவம்
  • மூன்று மாதங்களில் பதினாறு தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் பாவனையிலிருந்து நீக்கம்

மூன்று மாதங்களில் பதினாறு தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் பாவனையிலிருந்து நீக்கம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 29, 2024, 11:15:20 AM

சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின்படி, கடந்த மூன்று மாதங்களில் பதினாறு தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கண் சொட்டுகள், நீரிழிவு மற்றும் இருமல் மருந்துகள், கானுலா இரத்த டயாலிசிஸ் இரசாயனங்கள் அவற்றில் அடங்கும்.

Also Read : கோட்டை நீதவான் திலின கமகேயின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது

மேலும், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட நீரிழிவு மருந்தும் தரமற்றது என மருத்துவ வழங்கல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.தற்போது, ​​இந்த மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

Also Read : பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சிவ, நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதன் மூலம் அவர்களின் உயிர்கள் தொடர்பில் சுகாதார சேவையின் பொறுப்பு கேள்விக்குறியாகியுள்ளது  என்றும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Also Read : இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது

VIDEOS

Recommended