- முகப்பு
- மருத்துவம்
- புத்தளம் தள வைத்திய சாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்
புத்தளம் தள வைத்திய சாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்
ஏ. என். எம். முஸ்பிக்
UPDATED: Jul 17, 2024, 8:06:10 AM
புத்தளம் தள வைத்திய சாலைக்குசுகாதார அமைச்சர் வைத்திய ரமேஸ் பத்திரன விஜயம் செய்தார்.
இதன் போது வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான அருந்திக பெர்னாண்டோ ,அலி சப்ரி ரஹீம் போன்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு பிரதி சுகாதார காரியாலய அதிகாரி, வைத்தியசாலை வைத்திய அதிகாரி மற்றும் விசேட வைத்தியர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் சர்வ மத தலைவர்கள் போன்றோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் இந் நிகழ்வை வைத்தியசாலை வைத்திய அதிகாரி திலின வணிக சேகர தலைமை தாங்கி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது சுகாதார அமைச்சர் வைத்தியசாலைக்கு இரண்டரை கோடி ரூபாய் அவசர நிதி உதவியும் வைத்தியசாலை தேவைக்காக ஒரு வாகனமும் இரண்டு ஸ்கேன் இயந்திரமும் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வடமேல் மாகாண ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் போன்றவர்களுடன் வைத்தியசாலையில் சேதமடைந்த கட்டிடங்கள் சிலவற்றையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.