டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிப்பு விசேட மருத்துவ நிபுணர்

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Jul 7, 2024, 7:05:09 AM

டெங்கு நோய் பரவும் வீதம் அண்மைகாலமாக அதிகரித்து வருவதாகவும், அண்மித்த நாட்களில் இடம் பெற உள்ள கண்டி எசல பெரஹராவின் போது பாதிப்புக்களை ஏற்படுத்தாதவாறு முன் ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என கண்டி மாவட்ட பொதுமக்கள் சுகாதாரத்துறைக்குப் பொறுப்பான தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் கிருசாந்த மாசாரச்சி தெரிவித்தார்.

கண்டி செயலகத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கயைில்-

கடந்த ஆறு மாதகாலத்தில் மட்டும் கண்டி மாவட்டத்தில் 2219 பேர் டெங்கு நோயாளர்கள் என அறியப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு வாரங்களில் மழை காரணமாக இத்தொகையில் திடீர் அதிகரிப்பு காணப்படுவதாகும் அவர் தெரிவித்தார். கடந்த வாரத்தில் அவ்வாறு கண்டியில் 95 பேர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சந்தேகத்தின் பேரில் இனம் காணப்பட்டவர்களது தொகை அதிகரித்துள்ளதாகவும் கண்டி மாவட்டத்தில் 9 பேர் டெங்கு நோய் காரணமாக மரணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் மட்டும் கண்டி மா நகர சபை எல்லைக்குள் 25 பேர் இனம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

VIDEOS

Recommended