- முகப்பு
- மருத்துவம்
- SIMS ஹாஸ்பிடல் : உலக பிளாஸ்டிக் சர்ஜரி நாளில் தோல் தானம் குறித்த விழிப்புணர்வு.
SIMS ஹாஸ்பிடல் : உலக பிளாஸ்டிக் சர்ஜரி நாளில் தோல் தானம் குறித்த விழிப்புணர்வு.
தீபக்
UPDATED: Jul 25, 2024, 9:33:06 AM
World Plastic Surgery Day
ஜூலை 15ஆம் தேதி முதல் உலக பிளாஸ்டிக் சர்ஜரி நாள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அதற்கான பயிற்சி முகாமை நடத்தி வருகிறது சிம்ஸ் ஹாஸ்பிடல்.. இது குறித்து நோயாளிகளிடையே தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது..
பயிலும் பயிற்சி பெறும் மருத்துவர்களிடையே சர்ஜிகல் ஒர்க் ஷாப்புகளையும் நடத்தி வருகிறது.. இதன் சிறப்பு ஆசிரியராக பிரபசர் டி கார்த்திகேயன் அவர்கள் இது தொடர்பான வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
SIMS Hospital
மேலும் மருத்துவம் தொடர்பான அதிகாரிகளுடன் இது தொடர்பான குறும்படங்கள் மற்றும் போட்டிகளையும் நடத்தி வருகின்றனர்..
இந்த நிலையில் தற்போது புதிய தானமாக தோல் தானம் குறித்தும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது சிம்ஸ் ஹாஸ்பிடல்.
ஏற்கனவே கண் தானம், உடல் உறுப்புகள் தானம் என பல வகைகளை நாம் அறிந்திருப்போம். தற்போது தோல் தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Skin Donation
முக்கியமாக தீ விபத்தில் தங்கள் தோல்களை இழந்த நோயாளிகளுக்கு தங்கள் உடல் அழகை மீண்டும் பெற இந்த தோல் தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான போஸ்டர் புகைப்படங்கள் போட்டிகளையும் நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி உள்ளனர்.
Latest Medicine News
இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Vice President Dr. Raju Sivasamy, Medical Superintendent Dr. Sangeetha, Chief Operating Officer Mr. Suraj மற்றும் திரைப்பட நடிகர் இயக்குனர் ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தார்..