திருச்சியில் முதன்முதலாக காண்டூரா லேசிக் கண் சிகிச்சை அறிமுகம்.

JK 

UPDATED: Apr 3, 2024, 8:00:03 PM

புதிய பார்வை குறைபாடுகளை அறிமுகப்படுத்தும் "கண்டூரா லேசிக்" சிகிச்சையின் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் மருத்துவ பிரதீபா

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை 1936இல் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கம் என்பவரால் தரமான கண் சிகிச்சை அளிக்கும் வகையில் துவக்கப்பட்டது. 

இம்மருத்துவமனை 90வருடத்தை கடந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக 30சிறப்பு மருத்துவர்கள் கொண்டு இயங்கி வருகிறது.

இதுவரை 10லட்சத்திற்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மருத்துவமனையில் செய்யப்பட்டு உள்ளது.

தேசிய தர நிர்ணயச் சான்றிதழ் பெற்ற முதல் கண் மருத்துவமனை என்ற பெருமையும் இந்த ஜோசப் கண் மருத்துவமனைக்கு உள்ளது.

ரூபாய் 3.5 கோடி மதிப்பிலான புதிய காண்டூரா லேசர் கண் சிகிச்சைக்கான இயந்திரம் தற்போது பார்வை குறைபாடுகளை நுட்பமான முறையில் கையாளும் விதத்தில் "கண்டூரா லேசர் " என்ற அட்வான்ஸ் டெக்னாலஜியை திருச்சியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்சோர்வு, தலைவலி இது எல்லாம் தவிர்க்கும் வகையில் இந்த காண்டூரா லேசிக் டெக்னாலஜி அமையும். கிட்ட பார்வை, தூர பார்வை குறைபாடுகளை லேசிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்வதன் மூலம் கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.

கண்பார்வை மேம்படுத்த முடியும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமான பார்வையை சரி செய்ய முடியும். சுமார் 22,000 மேற்பட்ட புள்ளிகளை ஸ்கேன் செய்து ஆய்வு செய்ததன் மூலம் குறைபாடுகளை நேர்த்தியாக இந்த சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என தெரிவித்தார். 

பேட்டியின் போது துணை இயக்குனர் மருத்துவர் அகிலன் அருண்குமார், 

லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அக்ஷயா மருத்துவர் பிரியா மற்றும் நிர்வாக அதிகாரி சுபாபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Recommended