சுவாச அடைப்பு தொடர்பான தொற்று நோயான கக்குவான் இருமல் பரவல்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Apr 12, 2024, 1:18:44 AM

சுவாச அடைப்பு தொடர்பான தொற்று நோயான கக்குவான் இருமல், உலகின் பல நாடுகளில் மீண்டும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்புகள் பதிவாகி வருகின்ற போதிலும், இந்த ஆண்டு அது அதிகரிப்பை காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சீனா, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சீனாவில் இருந்து 32,380 பேர்கள் கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத அதிகரிப்பு என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.கடந்த ஆண்டை விட பிலிப்பைன்ஸில் கக்குவான் இருமல் நோயாளிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

Recommended