• முகப்பு
  • இந்தியா
  • மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை 3-வது முறை சோதனையும் வெற்றி !!!

மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை 3-வது முறை சோதனையும் வெற்றி !!!

Bala

UPDATED: Jun 23, 2024, 5:35:12 AM

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா ஏரோனாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இன்று காலை 7.10 மணிக்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை (RLV LEX) சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இதற்கு முன்பு இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், இப்போது 3-வது முறை சோதனைவும் வெற்றியடைந்துள்ளது. 

இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து 'புஷ்பக்' ஏவுகணை விடுவிக்கப்பட்டது. இதன்பிறகு, நிர்ணயிக்கப்பட்ட ஓடுதளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. 

இந்த ஏவுகணை, செயற்கைகோள் அல்லது விண்கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமியில் தரையிறங்கக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended