• முகப்பு
  • இந்தியா
  • குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.

Bala

UPDATED: Jun 12, 2024, 2:12:02 PM

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவர் பிரார்த்தித்தார்.

வெளியுறவுத்துறை இணையமைச்சர் குவைத் பயணம் :

குவைத் தீ விபத்தில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்ற தகவலின் அடிப்படையில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளார். 

தெற்கு குவைத் மங்கஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், அதில் 2 பேர் தமிழர்கள் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

VIDEOS

Recommended