• முகப்பு
  • விவசாயம்
  • ராஜபாளையம் அருகே பயிர்கள் கருகியதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் 40 ஏக்கருக்கு 10 லட்சம் வரை நஷ்டம் விவசாயிகள் வேதனை.

ராஜபாளையம் அருகே பயிர்கள் கருகியதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் 40 ஏக்கருக்கு 10 லட்சம் வரை நஷ்டம் விவசாயிகள் வேதனை.

அந்தோணி ராஜ்

UPDATED: Apr 25, 2024, 1:37:23 PM

ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் களத்தூர் கண்மாய் பாசனத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது.

அனைத்து பகுதிகளிலும் நாற்று பாவி நடுகை செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக நெற்பயிர்கள் 30 நாட்களை எட்டி இருந்த நிலையில், இரவில் வீசிய பலத்த காற்று காரணமாக அங்கிருந்த மின் கம்பம் உடைந்து வயலுக்குள் விழுந்துள்ளது.

இதனால் அப் பகுதியில் விவசாயம் செய்திருந்த 8 விவசாயிகளுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்திற்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி தற்போது 40 ஏக்கர் நிலமும் வறண்டு விட்டது.

பல இடங்களில் பயிர்கள் கருகி விட்டது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் தளவாய்புரம் மின்சார துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் பல காரணங்களை கூறும் அதிகாரிகள் இது வரை புதிய மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர்.

பயிர்கள் கருகியதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் 40 ஏக்கருக்கு 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

புதிய மின் கம்பத்தை மாற்றவும், சேதமான பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended