• முகப்பு
  • விவசாயம்
  • சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

செ.சீனிவாசன்

UPDATED: May 2, 2024, 1:06:48 PM

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது.

இந்த ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) 

உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சேர்ந்த விவசாயிகள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் சிபிசிஎல் நிறுவனம் நிலத்தை அளவீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தடுத்து நிறுத்துவோம் எனக் கூறி நேற்று பி பனங்குடி பகுதியில் விவசாய நிலத்தில் சாமியான பந்தல் அமைத்து விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் சாகுபடி தாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் முழுமையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் அதுவரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அவர்கள் திட்டவட்டமாக கூறி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் காவல்துறை சார்பில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு யாரும் வராத நிலையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நாகையில் வெயில் அதிகரித்து வந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கோபுராஜபுரம் ஊராட்சி வெள்ளபள்ளம் பகுதி சேர்ந்த வைத்தியநாதன் மனைவி அஞ்சம்மாள் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் உண்ணாவிரத போராட்டத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு மற்றும் கூச்சல் நிலவி வருகிறது.

 

VIDEOS

Recommended