திருவாரூரில், கருகும் பயிர்களை காப்பாற்ற தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
ஜெயராமன்
UPDATED: May 14, 2024, 9:54:08 AM
Agriculture News in Tamil
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை நெற்பயிர், பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மோட்டார்களை இயங்குவதற்கு மின்வாரியம் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்குவதில்லை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசு மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் டெல்டா விவசாயிகள், குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்பட்ட குறுவையும், பருத்தி சாகுபடியும் மேற்கொண்டனர்.
Tiruvarur District News
இந்நிலையில் மின்வாரியத்தால் நாள்தோறும் இரண்டு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி வருவதால். விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படாததால் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால் அதை சரி செய்ய அதிக செலவு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
விவசாயம் முக்கிய செய்திகள்
இது குறித்து விவசாய சங்கங்களும், விவசாயிகளும், விவசாயக் கூலி தொழிலாளர்களும் மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து தமிழக விவசாய நலச்சங்கம் சார்பில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் தடையின்றி வழங்க வலியுறுத்தி திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தை கண்டித்தும், கருகும் பயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இது குறித்த கோரிக்கை மனுவை மேற்பார்வை பொறியாளரிடம் விவசாயிகள் அளித்தனர்.
Online Agriculture news- Daily Agriculture news- Agriculture news updates- Tamil Nadu Farmer News- tamil agriculture news-