சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள 422 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு.

Admin

UPDATED: Apr 27, 2024, 6:46:40 AM

சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

கல்வி : 

Utility Agent - Ramp Driver

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். 

கனரக வாகனங்களை (HMV) இயக்குவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

பணி : 

Handyman/ Handywoman

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் வாசிக்கவும் புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும்.

உள்ளூர் மொழி, இந்தி மொழியை புரிந்து கொள்ளும் திறன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது :

28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

Sc/St பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், Obc பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம் :

Utility Agent - Ramp Driver - மாதம் 24,960 சம்பளம் வழங்கப்படும்.

உவியாளர் பணிக்கு மாதம் ரூ. 22,530 சம்பளம் வழங்கப்படும். 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

எப்படி விண்ணப்பிப்பது ?

விண்ணப்பதாரர்கள் https://www.aiasl.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் ரூ.500-க்கான DDயுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் நேரடியாக கலந்துக்கொள்ள வேண்டும்.

முகவரி : 

Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai -600043

நேர்முகத் தேர்வு :

Utility Agent Cum Ramp Driver : 02.05.2024 ( 9 to  12 )

Handyman: 04.05.2024 ( 9 to 12 ).

 

VIDEOS

Recommended