5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளிவந்தமை கவலைக்குரிய விடயம்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Sep 30, 2024, 3:58:57 PM
5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளிவந்தமை கவலைக்குரிய விடயமாக நிகழ்ந்த, மேற்கூறிய பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளிவந்தமையானது மாணவர்களையும் பெற்றோர்களையும் கலக்கமடையச் செய்துள்ளது.
இது இலங்கையின் தேசிய பரீட்சை முறையின் நேர்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இரண்டு பரீட்சை வினாத்தாள்களிலிருந்தும் வினாக்கள் முன்னதாகவே வெளிவந்ததாகக் கூறப்படும் இச்சம்பவமாவனது குறிப்பாக பல ஆண்டுகளாக கடினமாக தயாராகி வந்த மாணவர்களிடையே பரவலான ஏமாற்றத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தால் தங்களின் கடின உழைப்பும் எதிர்கால வாய்ப்புகளும் பாதிக்கப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் அஞ்சுகின்றனர். இந்த பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நேர்மையான தீர்வையும் அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறும், பரீட்சைக்கான கால அட்டவணையை மீளத் திட்டமிடுமாறும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளை நான் வலியுறுத்துகிறேன்.
சஜித் பிரேமதாச
தலைவர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி