- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
அச்சுதன்
UPDATED: May 1, 2024, 7:47:42 PM
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம்.
இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் உழைப்பாளர் தினம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.