உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மஸ்கட்டில் இருக்கும் தனது மகளை மீட்டுத் தருமாறு.

ஆர்.தீனதயாளன் 

UPDATED: May 25, 2024, 5:32:13 AM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கோயில்தேவராயன் பேட்டையில் வசித்து வரும் கலையரசி (33), சாட்சிநாதன் தம்பதியினர். இவர்களுக்கு தீபக்ராஜ் (13) மற்றும் அஸ்வின் (10) என்ற இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர். பெரிய மகன் எட்டாம் வகுப்பு இளைய மகன் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

கலையரசியின் கணவர் சாட்சிநாதன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். 

கலையரசி தனது பிள்ளைகளுடன் தாய் கண்ணகி தகப்பனார் சௌந்தர்ராஜன் உடன் வசித்து வருகிறார். 

குடும்ப வறுமையின் காரணமாக கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி கலையரசி அய்யம்பேட்டையில் பஷீர் என்ற ஏஜென்டிடம், மஸ்கட் நாட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்து சென்றிருந்தார். 

இவர் மஸ்கட் சென்று மூன்று மாத காலமே ஆன நிலையில் நெஞ்சுப் பகுதியில் ஒரு கட்டி உருவாகி அது வலி ஏற்பட்டு, வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் அவர் இந்தியா வர வேண்டும் என்றால், மஸ்கட்டில் உள்ள ஏஜென்டிடம், அய்யம்பேட்டையை சேர்ந்த ஏஜென்ட் பஷீர் இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், அதை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே கலையரசியை இந்தியாவிற்கு அனுப்ப முடியும் என கூறுவதாக பெற்றோர்கள் குற்றம் சுமந்துகின்றனர். 

மேலும் இது சம்பந்தமாக கலையரசியின் பெற்றோர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கலையரசியை மீட்டுத் தரும்படி கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

இது சம்பந்தமாக மஸ்கட்டில் இருந்து கலையரசி வாட்ஸப்பில் ஒரு வீடியோ பதிவுவையும் அனுப்பி உள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொடர்ந்து உடல் நலம் சரியில்லாமல் இருந்து வரும் தனது மகளுக்கு வைத்தியம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால், கலையரசியை உடனடியாக மீட்டு தரும்படி பெற்றோர்கள் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

 

VIDEOS

Recommended