• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர்–திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம்.

திருவள்ளூர்–திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம்.

சுரேஷ்பாபு

UPDATED: Apr 25, 2024, 8:26:28 PM

சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து திருநின்றவூர் வரை, மீதம் உள்ள பணி, கடந்த, 2022-ல் ரூ.364 கோடி மதிப்பில் துவங்கியது.

இதற்காக திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் வரை பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மொத்தம், 17.5 கி.மீட்டர் துாரம் அமையவுள்ள இச்சாலையில், ஏழு இடங்களில் மேம்பாலம் மற்றும் 17 இடங்களில் சிறு பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2500 குடும்பத்தை சேர்ந்தவர்கள் செவ்வாப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பெரிய காலனி, சின்ன காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சிறுகடல் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களில் யாரேனும் உயிர் இழந்தால் அவர்களது உடல்களைக் கொண்டு செல்லும் பாதை இந்த தேசிய சாலையால் அடைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை ஊராட்சி மற்றும் சிறு கடல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், இல்லையென்றால் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் எனவே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால் கோரிக்கைகள் எதையும் பரிசீலிக்காமல் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் செவ்வாப்பேட்டை கிராம மக்கள் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஏற்படுத்தி தரவேண்டும். 

பள்ளிக்கு செல்பவர்கள் பாலிடெக்னிக் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருப்பதால் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இல்லையேல் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

  • 3

VIDEOS

Recommended